ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேவாக் பிறந்தநாளுக்கு சரியான ட்ரிப்யூட் அளித்தது யார்? ரோஹித்தா, உமேஷ் யாதவா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

News image
Updated On :20 அக்டோபர் 2019, 1:27 pm

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டமும் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிக்ஸர் மூலம் இரட்டைச் சதத்தை எட்டினார். 

இதைப் பாராட்டிய ரசிகர்கள், விரேந்திர சேவாக் பிறந்தநாளுக்கு, ரோஹித் சர்மா சிக்ஸர் மூலம் இரட்டைச் சதம் அடித்தது சிறந்த ட்ரிப்யூட்டாகும் என்று கொண்டாடி வந்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கடைசி கட்டத்தில் களமிறங்கி எதிர்கொண்ட 10 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். அவர் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

உமேஷ் யாதவின் இந்த அதிரடியையும் பாராட்டிய ரசிகர்கள், இதையும் விரேந்திர சேவாக்கின் பிறந்தநாளுக்கு சிறந்த ட்ரிப்யூட் என்று கொண்டாடி வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட்டில் அதிரடி என்கிற ஒரு டெம்பிளேட்டை உருவாக்கிய காரணத்தினால், சேவாக் இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார். இதன்காரணமாகவே, இந்திய அணியின் அடுத்த சேவாக் யார் என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

First #RohitSharma completed his double century with a six. Now Umesh Yadav hits 31 runs in 10 balls (5 sixes). Everyone is paying tribute to Virender Sehwag on his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.