டி20 உலகக் கோப்பைக்கு தோனியைத் தாண்டி யோசிக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் தோனி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோனியைத் தேர்வு செய்யக்கூடாது. அதைத் தாண்டி நாம் யோசிக்கவேண்டும். என்னுடைய அணியில் தோனிக்கு இடமில்லை. டி20 உலகக் கோப்பை எனும்போது ரிஷப் பந்த் குறித்து நாம் யோசிக்கவேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவர் நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமல்லாமல் நல்ல பேட்ஸ்மேனும் கூட.
டி20 உலகக் கோப்பை பற்றி யோசிக்கவேண்டுமென்றால், இளைஞர்களைத் தேர்வு செய்வதைத்தான் நான் பரிந்துரைப்பேன். தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால், அவரைத் தாண்டி யோசிக்கவேண்டிய நேரமிது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல்: இளைஞா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

அரசுப் பேருந்தில் கட்சிப் பெயா்: காவல் துறையினா் விசாரணை

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


