இந்திய முன்னாள் வீரர் காலமானார்!
இந்திய முன்னாள் வீரர் மாதவ் ஆப்தே, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது, 86.


இந்திய முன்னாள் வீரர் மாதவ் ஆப்தே, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது, 86.
மும்பையைச் சேர்ந்த மாதவ் ஆப்தே, 1952-53 காலக்கட்டங்களில் இந்திய அணிக்காக ஏழு டெஸ்டுகளில் விளையாடி, 542 ரன்கள் எடுத்துள்ளார். ரன்கள் சராசரி - 49.27. உடல்நலக்குறைவால் மும்பையின் பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதவ் ஆப்தே, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
67 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள மாதவ் ஆப்தே, 3336 ரன்களும் ஆறு சதங்களும் அடித்துள்ளார். மாதவ் ஆப்தேவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...