மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிரிக்கெட் சங்கத் தலைவர்களாக சௌரவ் கங்குலி, முகமது அசாருதீன் தேர்வு

அத்னான் முகமது, சீஷான் அத்னான் முகமது ஆகியோர் அசாருதீன் பெயரை முன்மொழிந்தனர்.

News image
Updated On :28 செப்டம்பர் 2019, 8:49 am

Raghavendran

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் (56) தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 147-73 என்ற வாக்கு விகிதத்தில் அசாருதீன் வெற்றிபெற்றார்.

கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு அசார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அத்னான் முகமது, சீஷான் அத்னான் முகமது ஆகியோர் அசாருதீன் பெயரை முன்மொழிந்தனர்.

முகமது அசாருதீன் கிரிக்கெட் வரலாற்றில் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,215 ரன்களும், 334 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9,378 ரன்களையும் குவித்துள்ளார்.

அதேபோன்று மற்றொரு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.