சரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்! சமாளிக்குமா இந்தியா?

நியூஸிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்.
சரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்! சமாளிக்குமா இந்தியா?

நியூஸிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் புதன்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் சில அரிய சாதனைகளைப் படைக்க நியூஸிலாந்தின் முன்னணி வீரர் ராஸ் டெய்லருக்கு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உச்சகட்ட ஆட்டத்திறனுடன் விளங்கும் ராஸ் டெய்லர், நியூஸிலாந்தின் ரன் மெஷினாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக 2015-ஆம் ஆண்டு முதல் இவரது ஆட்டத்திறன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

அதிரடியும், அனுபவமும் கலந்த இவரது ஆட்டம் கடந்த ஆண்டில் அந்த அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. 2018-ல் 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ராஸ் டெய்லர், மொத்தம் 920 ரன்கள் குவித்துள்ளார், சராசரி 92.74 ஆகும். சரவெடியாக அதிரடி காட்டி வரும் ராஸ் டெய்லர், ஒருநாள் தொடரின் போது இந்தியாவுக்கு கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்தால், தொடர்ந்து 7 அரைசதங்கள் எடுத்து புதிய சாதனைப் படைப்பார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 20-ஆவது சதத்தை பதிவு செய்துள்ள ராஸ் டெய்லர், கடைசி 10 இன்னிங்ஸ்களில் முறையே 1, 59, 113, 10, 181*, 80, 86*, 54, 90, மற்றும் 137 ரன்கள் எடுத்துள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் ஜாவித் மியான்தத், கடந்த 1987-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 9 அரைசதங்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் அரைசதம் கடந்து இச்சாதனையை முறியடிக்கும் அரிய வாய்ப்பு ராஸ் டெய்லருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் 293 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையையும் ராஸ் டெய்லர் படைப்பார். தற்போது வரை முன்னாள் கேப்டன் ஸ்டீஃபன் ஃபளெமிங் 8,007 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், 10 ரன்கள் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 13-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அதுபோன்று முகமது ஷமி, ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com