இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்தியர்களில் 118 இன்னிங்ஸ்களுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தார். 114 இன்னிங்ஸ்களுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 126 இன்னிங்ஸ்களுடன் சௌரவ் கங்குலி 3-ஆவது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சௌரவ் கங்குலி, க்ரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இடதுகை பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பிரையன் லாரா உடன் ஷிகர் தவன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் 101 இன்னிங்ஸ்களுடன் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு: தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு

முக்குன்றம் ஸ்ரீபாலால அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
‘குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



