2003 உலகக் கோப்பை. இந்தியா vs பாகிஸ்தான். இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அதிலும் அக்தர் பந்துவீச்சில் சச்சின் தேர்ட் மேன் பகுதியில் அடித்த சிக்ஸரை ஆயுசுக்கும் மறக்க மாட்டார்கள் ரசிகர்கள். 98 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த சச்சின், கடைசியில் அக்தரின் அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டம் குறித்து அக்தர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
சச்சினுக்கு எதிராகப் பந்துவீசியது நல்ல அனுபவம். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவரை நான் 12-13 தடவை வீழ்த்தியுள்ளேன். ஆனாலும் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் செஞ்சுரியனில் நடைபெற்ற ஆட்டத்தில் என்னுடைய பந்தில் சச்சின் அடித்த சிக்ஸரை தான் அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு சிக்ஸர், 1.3 பில்லியன் கோடி மக்களைச் சந்தோஷப்படுத்தும் எனத் தெரிந்திருந்தால் ஒவ்வொரு நாளும் என் பந்தில் அவரை சிக்ஸர் அடிக்க விட்டிருப்பேன் என வேடிக்கையாகப் பதில் அளித்துள்ளார்.
அந்த ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

