47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவியிடமிருந்து பொறுமையைக் கற்றுக்கொண்டேன்: விராட் கோலி

மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொறுமையைக் கற்றுக்கொண்டேன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 6:45 am

DIN

மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொறுமையைக் கற்றுக்கொண்டேன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மாணவர்களுடன் இணையம் வழியாக உரையாடிய கோலி கூறியதாவது:

அனுஷ்காவும் நானும் சந்தித்துக்கொண்டதில் இருந்து பொறுமையைக் கடைப்பிடிப்பதைக் கற்றுக்கொண்டேன். அதற்கு முன்பு நான் அவ்வளவு பொறுமைசாலி கிடையாது.

அவருடைய ஆளுமையும் முக்கியமான சூழல்களில் வெளிப்படும் அமைதியும் எனக்குப் பாடங்களாக உள்ளன. இருவரும் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். கடினமான சூழல்களில் உங்களுடைய ஈகோவை விழுங்க வேண்டும், ஆபத்துச் சமயங்களில் உடன் இருப்பது, தொடர்ந்து போராடி உங்களுக்கான வழிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை அவர் கடைப்பிடிப்பார். இதுபோன்ற நல்ல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.