47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அணியில் என்னைத் தேர்வு செய்யாதபோது இரவெல்லாம் அழுதேன், கதறினேன்: விராட் கோலி

எல்லாமே சரியாக அமைந்த தருணம் அது. நன்கு விளையாடி வந்த நிலையில் அணியில் என்னைச் சேர்க்கவில்லை.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 5:27 am

DIN

தில்லி அணிக்கு முதலில் என்னைத் தேர்வு செய்யாதபோது இரவெல்லாம் அழுதேன் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மாணவர்களுடன் இணையம் வழியாக உரையாடிய கோலி கூறியதாவது:

முதல்தடவையாக மாநில அணிக்கு என்னைத் தேர்வு செய்யாதபோது, அது பின்னிரவு என நினைக்கிறேன், உடைந்து அழுதேன். காலை மூன்று மணி வரை அலறினேன். என்னால் நடந்ததை நம்பமுடியவில்லை.

ஏனெனில் நான் நன்றாக விளையாடி வந்தேன். எல்லாமே சரியாக அமைந்த தருணம் அது. நன்கு விளையாடி வந்த நிலையில் அணியில் என்னைச் சேர்க்கவில்லை.

ஏன் என்னைத் தேர்வு செய்யவில்லை என என் பயிற்சியாளரிடம் இரண்டு மணி நேரம் பேசினேன். நியாயமே இல்லை எனக் கருதினேன். ஆனால் ஆர்வமும் உழைப்பும் உங்களுக்கானதை நிச்சயம் பெற்றுத் தரும் என்று பேசினார்.

விராட் கோலி, 2006-ல் தில்லி அணிக்குத் தேர்வானார். 2008-ல் யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு கோப்பையை வென்றார். இதன்பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்குத் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.