தனக்குப் பிடித்த 5 ஆல்ரவுண்டர்களின் பெயர்களைக் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உலகின் தலைசிறந்த 5 ஆல்ரவுண்டர்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர்களில் ஒருவர் கபில் தேவ். அவருடன் இணைந்து நான் விளையாடியுள்ளேன். அடுத்ததாக இம்ரான் கான். என் முதல் சுற்றுப்பயணத்தில் இம்ரானுக்கு எதிராக விளையாடினேன். அடுத்ததாக ரிச்சர்ட் ஹாட்லி. எனது 2-வது சுற்றுப்பயணத்தில் ஹாட்லிக்கு எதிராக விளையாடினேன். கடைசி இருவரான மால்கம் மார்ஷல், ஐயன் போத்தம் ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். இந்த 5 ஆல்ரவுண்டர்களைப் பார்த்து வளர்ந்த நான், பிறகு அவர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது என்று கூறியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் குறித்து சச்சின் கூறியதாவது:
இத்தனை வருடங்களாக நான் நன்றாக இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். இப்போது அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறுகிறேன். கரோனா பாதிப்பு நிலவும் இச்சமயத்தில் வீட்டுக்குள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். நான் ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியது போல அவர்களும் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


