ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அஸ்வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது யார்க்‌ஷைர் அணி!

அஸ்வின் உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது யார்க்‌ஷைர் கவுண்டி அணி.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 5:22 am

DIN


அஸ்வின் உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது யார்க்‌ஷைர் கவுண்டி அணி.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 29,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி 2020, ஏப்ரல் 12 முதல் ஆரம்பமாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அஸ்வின், கேஷவ் மஹாராஜ், நிகோலஸ் பூரான் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களின் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது யார்க்‌ஷைர் கவுண்டி அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.