
ஆஸ்திரேலியா - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 4, 6, 9 தேதிகளில் டி20 தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த டி20 தொடர் 2021 அல்லது 2022 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முன்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.