சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரோனா தாக்கத்தால் பரிசுத்தொகையைக் குறைத்த யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி!

எனினும் முதல் சுற்றுக்கான பரிசுத்தொகை கடந்த வருடத்தை விடவும்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டிக்கான பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டி சமீபத்தில் அறிவித்தார். பிரபல வீரர் நடாலும் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டிக்கான பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் இந்த வருடப் பரிசுத்தொகை 53.4 மில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 7.6 மில்லியன் டாலர் தொகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யு.எஸ். ஓபன் பட்டத்தை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு 3 மில்லியன் டாலர் கிடைக்கும். இது கடந்த வருடத்தை விடவும் 850,000 டாலர் குறைவாகும். எனினும் முதல் சுற்றுக்கான பரிசுத்தொகை கடந்த வருடத்தை விடவும் 5% அதிகரித்துள்ளது. 

பிரபல வீரர்கள் விலகியுள்ளதால் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். 22 வயது சுமித், தரவரிசையில் 127-வது இடத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.