சிட்னியில் குழந்தைகளுடன் ஊர் சுற்றிய இந்திய டெஸ்ட் வீரர்கள்

டெஸ்ட் அணியில் மட்டும் உள்ள அஸ்வின், புஜாரா, ரஹானா ஆகிய மூவரும் தங்களுடைய குழந்தைகளுடன்... 
சிட்னியில் குழந்தைகளுடன் ஊர் சுற்றிய இந்திய டெஸ்ட் வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. நாளை முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து சிட்னிக்கு வந்த இந்திய வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு விடுதியை விட்டு தற்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய ஒருநாள், டி20 அணிகள் இடம்பெறாமல் டெஸ்ட் அணியில் மட்டும் உள்ள அஸ்வின், புஜாரா, ரஹானா ஆகிய மூவரும் தங்களுடைய குழந்தைகளுடன் சிட்னியில் ஊர் சுற்றியிருக்கிறார்கள். சக வீரர்களுடனும் குழந்தைகளுடனும் சிட்னியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மூவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com