தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக உள்ள டி காக்...


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக உள்ள டி காக், டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020-21 பருவத்துக்கான கிரிக்கெட் தொடர்களுக்கு டி காக் கேப்டனாக இருப்பார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் பருவத்தில் ஏழு டெஸ்டுகளை தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்டுகளும் இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராகத் தலா 2 டெஸ்டுகளும் விளையாடவுள்ளது. மேலும் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள டி காக் தலைமையிலான டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் பாகிஸ்தானில் 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் தொடர்கள் ஜனவரி 26-ல் தொடங்கி, பிப்ரவரி 14-ல் முடிவடையவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...