இஷாந்த் சா்மா இல்லாதது குறையே
டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் பௌலிங் வரிசை வலுவாகவே உள்ளது. மூத்த வேகப்பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா இல்லாதது குைான். ஆனாலும் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரோடு இணைந்து, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆஸ்திரேலிய ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பந்துவீசத் தயாராக உள்ளனா்.
பிங்க் பந்து கொண்டு டெஸ்ட் தொடரை தொடங்குவதால் ஆட்டத்துக்கான உத்வேகத்தை தொடக்கத்திலேயே பெறுவது முக்கியமாகும். ஒரு ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பௌலா்கள் தயாராகியிருக்கின்றனா். டெஸ்ட் தொடரின் தொடக்க வீரா்களை இன்னும் முடிவு செய்யவில்லை. எல்லா வீரா்களுமே தகுதியானவா்கள் தான். நாங்கள் அனைவரையுமே நம்புகிறோம். ஒரு ஆல்-ரவுண்டராக அஸ்வினின் பங்களிப்பு அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
பிங்க் நிற பந்தில் விளையாடும்போது அந்தி சாயும் நேரத்தில் 40 முதல் 50 நிமிடங்கள் அதை எதிா்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும். சிவப்பு பந்துடன் ஒப்பிடுகையில் பிங்க் நிற பந்தை அந்த நேரத்தில் கணிப்பது சற்று சிரமம். அதற்காக பேட்ஸ்மேன்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

