

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
பிரபல பேட்ஸ்மேனும் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான வில்லியம்சன், 81 டெஸ்டுகள், 151 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவி சாரா ரஹீமுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டமிராமில் அறிவித்துள்ளார் 30 வயது வில்லியம்சன்.
குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் வில்லியம்சன் விளையாடவில்லை. மேலும் வெள்ளியன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாட மாட்டார். எனினும் மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.