விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள்: ஆதிக்கம் செலுத்திய அணி எது?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:23 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று அடிலெய்டில் தொடங்கியுள்ளது. பகலிரவு ஆட்டமான இது, பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்படுகிறது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் மோதிய டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி 42 வெற்றிகளையும் இந்திய அணி 28 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஆனால் கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது 2-1 என டெஸ்ட் தொடரில் வெற்றியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

இரு அணிகளும் ஆஸ்திரேலியாவில் விளையாடிய டெஸ்ட் தொடர்கள்

1947-48, ஐந்து டெஸ்டுகள்: இந்தியாவை 4-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா
1967-68, நான்கு டெஸ்டுகள்: இந்தியாவை 4-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
1977-78, ஐந்து டெஸ்டுகள்: இந்தியாவை 3-2 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
1980-81, மூன்று டெஸ்டுகள்: 1-1 என தொடர் சமன் 
1985-86, மூன்று டெஸ்டுகள்: 0-0 என தொடர் சமன் 
1991-92, ஐந்து டெஸ்டுகள்: இந்தியாவை 4-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
1999-00, மூன்று டெஸ்டுகள்: இந்தியாவை 3-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
2003-04, நான்கு டெஸ்டுகள்: 1-1 என தொடர் சமன் 
2007-08, நான்கு டெஸ்டுகள்: இந்தியாவை 2-1 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
2011-12, நான்கு டெஸ்டுகள்: இந்தியாவை 4-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா 
2014-15, நான்கு டெஸ்டுகள்: இந்தியாவை 2-0 எனத் தோற்கடித்த ஆஸ்திரேலியா
2018-19, நான்கு டெஸ்டுகள்: ஆஸ்திரேலியாவை 2-1 எனத் தோற்கடித்த இந்தியா    
 
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அணிகள் பெற்ற வெற்றிகள்

ஒட்டுமொத்தமாக - ஆஸ்திரேலியாவுக்கு 42 வெற்றிகள், இந்தியாவுக்கு 28 வெற்றிகள்
ஆஸ்திரேலியாவில் - ஆஸ்திரேலியாவுக்கு 29 வெற்றிகள், இந்தியாவுக்கு 7 வெற்றிகள்
2010 முதல் - ஆஸ்திரேலியாவுக்கு 8 வெற்றிகள், இந்தியாவுக்கு 10 வெற்றிகள்
ஆஸ்திரேலியாவில் 2010 முதல் - ஆஸ்திரேலியாவுக்கு 7 வெற்றிகள், இந்தியாவுக்கு 2 வெற்றிகள்
ஆஸ்திரேலியாவில் 2018-19 டெஸ்ட் தொடர்: இந்தியா 2-1 என வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.