தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அடிலெய்டில் இந்தியா முதலில் பேட்டிங்: கோலியின் டாஸ் சாதனை தொடருமா? 

டெஸ்ட் தொடருக்கு இதை ஒரு நல்ல தொடக்கமாக இந்திய ரசிகர்கள் எண்ணிக் கொள்ளலாம். 

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:36 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று அடிலெய்டில் தொடங்கியுள்ளது. பகலிரவு ஆட்டமான இது, பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்படுகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

டெஸ்ட் தொடருக்கு இதை ஒரு நல்ல தொடக்கமாக இந்திய ரசிகர்கள் எண்ணிக் கொள்ளலாம். 

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 25 டாஸ்களை வென்றுள்ளார். அதில் ஒருமுறை கூடத் தோற்றதில்லை. 

இந்த 25 டெஸ்டுகளில் 21 டெஸ்டுகளை கோலி வென்றுள்ளார். 4 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. 

வெளிநாடுகளில் 10 டாஸ்களை வென்ற கோலி, எட்டு டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். 

இதனால் அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று கோலியின் டாஸ் சாதனை தொடர்ந்து நீடிக்கும் என நம்பலாமா?

ஆஸ்திரேலிய அணியின் இன்னொரு சாதனை வேறு பயமுறுத்துகிறது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய ஏழு பகலிரவு டெஸ்டுகளிலும் வென்றுள்ளது. அதனால் பகலிரவு டெஸ்டில் தோற்காத ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி முறியடிக்கப் போகிறதா?

இந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டி, யாருடைய சாதனையைத் தகர்க்கப் போகிறது? கோலியின் டாஸ் வெற்றிகள் சாதனையையா அல்லது ஆஸ்திரேலியாவின் பகலிரவு டெஸ்ட் வெற்றிகள் சாதனையையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.