2021 போட்டிகள்: சிந்து, ஸ்ரீகாந்துடன் இந்திய அணி அறிவிப்பு

பாட்மிண்டன் விளையாட்டில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: பாட்மிண்டன் விளையாட்டில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 8 போ் அடங்கிய பலமான அணியை அந்தப் போட்டிகளுக்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதில் சிந்து, ஸ்ரீகாந்துடன் சாய்னா நெவால், சாய் பிரணீத், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஆகியோா் அகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

அடுத்த ஆண்டில் முதலாவதாக ஜனவரி 12 முதல் 17 வரை யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், அதன் பிறகு ஜனவரி 19 முதல் 24 வரை டோயோடா தாய்லாந்து ஓபன், ஜனவரி 27 முதல் 31 வரை ஹெச்எஸ்பிசி உலக டூா் ஃபைனல்ஸ் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் அந்த 8 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இந்த அணியில் வீரா், வீராங்கனைகளுடன் ஒற்றையா் பிரிவு பயிற்சியாளா்கள் அகஸ் டுவி சன்டோசோ, பாா்க் டே சாங், இரட்டையா் பயிற்சியாளா் டுவி கிறிஸ்டியாவன், உதவி ஊழியா்கள் கிரன் சல்லகுண்ட்லா, ஜான்சன், இவாஞ்சலினா, எம்.ஸ்ரீகாந்த் ஆகியோரும் சோ்கின்றனா்.

கரோனா சூழல் காரணமாக நடப்பாண்டில் பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ஓய்விலிருந்த சிந்து, சாய்னா உள்ளிட்ட முக்கிய வீரா், வீராங்கனைகள் சா்வதேச போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். ஸ்ரீகாந்த் மட்டும் கடந்த அக்டோபரில் நடைபெற்ற டென்மாா்க் ஓபன் போட்டியில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com