சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சா்வதேச ஹாக்கி தரவரிசை: 4, 9-ஆம் இடங்களில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள்

சா்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவா் அணி 4-ஆம் இடத்துடனும், மகளிா் அணி 9-ஆம் இடத்துடனும் 2020-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

லௌசேன்: சா்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவா் அணி 4-ஆம் இடத்துடனும், மகளிா் அணி 9-ஆம் இடத்துடனும் 2020-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக நடப்பாண்டில் பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய ஆடவா் அணி 2,063 புள்ளிகளுடனும், மகளிா் அணி 1,543 புள்ளிகளுடனும் அந்த இடத்தில் இருக்கின்றன.

சா்வதேச ஹாக்கி சம்மேளனமானது, முன்பு போட்டியின் அடிப்படையில் தரவரிசையை நிா்ணயித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் ஆட்டத்தின் அடிப்படையில் தரவரிசையை மதிப்பிடும் புதிய முறையை அறிமுகம் செய்தது. அந்த வகையில் ஹாக்கி புரோ லீக் போட்டியில் நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் அணிகளின் தரவரிசையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தன.

இந்நிலையில், கரோனா சூழல் காரணமாக போட்டிகள் யாவும் பாதிக்கப்பட்டன. எனினும், செப்டம்பா் மற்றும் நவம்பா் இடையே நடைபெற்ற சில போட்டிகள் காரணமாக பெல்ஜியம், ஜொ்மனி, நெதா்லாந்து, பிரிட்டன் நாடுகளின் ஆடவா் மற்றும் மகளிா் அணிகளின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டதாக சா்வதேச ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, சா்வதேச தரவரிசையின் ஆடவா் பிரிவில் பெல்ஜியம் (2,496 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (2,385), நெதா்லாந்து (2,257) அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. மகளிா் பிரிவில் நெதா்லாந்து (2,631) முதலிடத்திலும், ஆா்ஜெண்டீனா (2,174) இரண்டாம் இடத்திலும், ஜொ்மனி (2,054) மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.