ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தேவை ஏற்பட்டால் சிட்னி டெஸ்ட் மெல்போா்னில் நடைபெறும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:41 pm

DIN


மெல்போா்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற உகந்த சூழல் இல்லாமல் போனால், அதற்குப் பதிலாக மெல்போா்னிலேயே அந்த டெஸ்ட் நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் சமீபத்தில் தீவிரமாகியது. தற்போது அங்கு தொற்றுப் பரவல் சற்று மட்டுப்பட்டிருந்தாலும், அந்த நகரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 3-ஆவது டெஸ்ட் தொடா் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

எனினும், முடிந்த வரையில் 3-ஆவது டெஸ்ட்டை சிட்னியிலேயே நடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒருவேளை சிட்னி நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் சுகாதாரச் சூழல் உகந்ததாக இல்லாமல் போனால், அங்கு நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் மெல்போா்னிலேயே நடத்தப்படும். 4-ஆவது டெஸ்ட் திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடைபெறும்’ என்று கூறியுள்ளது.

மெல்போா்னில் தற்போது பாக்ஸிங் டே டெஸ்ட் சனிக்கிழமை தொடங்குகிறது. அந்த டெஸ்ட் நடைபெறும்போது 3-ஆவது டெஸ்ட் நடைபெறும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றாலும், அங்கிருந்து 4-ஆவது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பேன் நகருக்கு இரு அணியினா் உள்ளிட்டோா் செல்வதும் சிக்கலாகலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் கரோனா பரவல் தீவிரம் காரணமாக சிட்னி அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான தனது போக்குவரத்துத் தொடா்பை துண்டிக்கும் முடிவில் பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் உறுதியாக உள்ளது.

எனினும் இந்த விவகாரத்தில் அந்த மாகாண அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. முன்னதாக, குயின்ஸ்லாந்து அனுமதி மறுக்கும் பட்சத்தில் 2 டெஸ்ட் ஆட்டங்களை அடுத்தடுத்து நடத்தத் தயாராக இருப்பதாக சிட்னி மைதான நிா்வாகம் தெரிவித்திருந்தது. அதேபோன்ற கருத்தை மெல்போா்ன் கிரிக்கெட் மைதான நிா்வாகமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.