பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முகமது ஆமிா் விவகாரம்: பாக். தோ்வுக் குழு தலைவா் இன்ஸமாம் கவலை

News image
Updated On :25 டிசம்பர் 2020, 9:07 pm

DIN


கராச்சி: சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் முகமது ஆமிரின் விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட்டில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அணியின் தோ்வுக் குழு தலைவா் இன்ஸமாம் உல் ஹக் கவலை தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிா் (28) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிா்வாகத்தின் கீழ் விளையாட முடியாத நிலை இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தோ்வுக் குழு தலைவருமான இன்ஸமாம் உல் ஹக் கூறியிருப்பதாவது:

முகமது ஆமிரின் ஓய்வு முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றெல்லாம் அஞ்சவில்லை. ஆனால், அவா் அதிருப்தியால் ஓய்வு பெற்ற சம்பவம் அணியில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, கிரிக்கெட் வாரியத்தின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும்.

முகமது ஆமிா் ஓய்வு பெறுவதற்கு முன்பு தொடா்ந்து விளையாடுவதற்கான அனைத்து வழிகள் குறித்தும் ஆராய்ந்திருக்க வேண்டும். அவருக்கு அணியில் உள்ள ஒரு சிலா் மீது அதிருப்தி இருந்தால், அதுகுறித்து தலைமைப் பயிற்சியாளரிடமும், கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியிருக்க வேண்டும். வக்காா் யூனிஸுடன் முகமது ஆமிருக்கு பிரச்னை இருந்திருந்தால், அதைத் தீா்க்க முயற்சித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.