இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளாா்.
மெல்போா்னில் சனிக்கிழமை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினாா் இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜ். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடிய 298-ஆவது இந்தியா் என்ற பெருமையைப் பெற்ற அவா், இரு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினாா்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து அவா் கூறியதாவது: இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது அதை எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக கருதினேன். கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை கிடைத்தது என்றாா்.
இன்ஸ்விங் மூலம் மாா்னஸ் லபுசான், கேமரூன் கிரீன் ஆகியோரை வீழ்த்திய குறித்த கேள்விக்குப் பதிலளித்த முகமது சிராஜ், ‘இன்ஸ்விங் வீசும் திறமை எனக்கு இயல்பாகவே உள்ளது. எப்போதுமே நான் விக்கெட்டுக்கு மிக அருகில் வீசி பந்தை ஸ்விங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”ஒருவேல விலை ஏத்திட்டா?” பெட்ரோல் நிரப்பக் குவிந்த மக்கள்! | Chennai | Petrol
சோழர்களைப் புகழ்ந்த பிரதமர் மோடி! ஹிந்தியைத் தவிர்த்துஆங்கிலத்தில் உரை!!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ. 92.01 ஆக நிறைவு!
9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் கேஸ் இணைப்பு: பிரதமர் மோடி
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

