புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

2-ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 326

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய 326 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:57 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய 326 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 

மெல்போா்னில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்கு சுருண்டது. பும்ராவின் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய 326 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிபட்சமாக ரஹானே 112, ஜடேஜா 57, ஷுப்மன் கில் 45 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க் 3, நாதன் லயன் 3, பேட் கம்மின்ஸ் 2, ஹேசல்வுட் 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

முதன் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணை 131 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.