

மெளன்ட் மெளன்கனுய், டிச. 30: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்டில் நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது.
மெளன்ட் மெளன்கனுயில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 155 ஓவர்களில் 431 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 129 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஃஹீன் அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான் 102.2 ஓவர்களில் 239 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஃபஹீம் அஷ்ரஃப் 91 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்தில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து, 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கி 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. டாம் பிளன்டெல் 64 ரன்கள் சேர்த்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் 373 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ûஸ செவ்வாய்க்கிழமை தொடங்கிய பாகிஸ்தான், கடைசி நாளான புதன்கிழமை 123.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 102 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் செளதி, போல்ட், ஜேமிசன், வாக்னர், சேன்ட்னர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் ஆனார்.
ஹாட்ரிக் வெற்றி
இந்த வெற்றியுடன், சொந்த மண்ணில் தொடர்ந்து 3 டெஸ்டுகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக வென்ற நிலையில், இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் நியூஸிலாந்து வென்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.