ஐசிசி டி20 தரவரிசை: ராகுல் பலே முன்னேற்றம்

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஐசிசி டி20 தரவரிசை: ராகுல் பலே முன்னேற்றம்


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 2 அரைசதங்கள் உட்பட 224 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் தரவரிசையில் முதன்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி டாப் 10-இல் நுழைந்து 10-வது இடத்தில் உள்ளார். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 9-வது இடத்திலேயே நீடிக்கிறார்.

இதுதவிர ஷ்ரேயஸ் ஐயர் 63 இடங்கள் முன்னேறி 55-வது இடத்தைப் பிடித்துள்ளார். மணீஷ் பாண்டே 12 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறார்.

பந்துவீச்சு தரவரிசையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜாஸ்பிரீத் பூம்ரா 26 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 30-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் 8 விக்கெட்டுகளைப் கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் 34 இடங்கள் கண்டு 57-வது இடத்தை அடைந்துள்ளார். நவ்தீப் சைனி 71-வது இடத்துக்கும், ரவீந்திர ஜடேஜா 34-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 23-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசி இரண்டு ஆட்டங்களில் மிரட்டிய டிம் சைஃபர்ட் 73-வது இடத்தில் இருந்து 34-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ராஸ் டெய்லர் 50-வது இடத்தில் இருந்து 39-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். இஷ் சோதி 6 இடங்கள் முன்னேற்றம் கண்டு 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com