47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டி20 தரவரிசையில் கோலிக்கு பின்னடைவு

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி சரிவைச் சந்தித்துள்ளார். 

News image
Updated On :17 பிப்ரவரி 2020, 4:25 pm

DIN


டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி சரிவைச் சந்தித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்ததையடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டது.

தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் 2 அரைசதங்கள் உட்பட மூன்று ஆட்டங்களில் 136 ரன்கள் குவிக்க பேட்டிங்குக்கான தரவரிசையில் 9-வது இடத்துக்கு (687 புள்ளிகள்) முன்னேறியுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி 10-வது இடத்துக்கு (673 புள்ளிகள்) சறுக்கியுள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 662 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த சில டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக கலக்கி வந்த கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 

பந்துவீச்சுக்கான தரவரிசையில் இந்தியப் பந்துவீச்சாளர் பூம்ரா 12-வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து தொடரில் நன்றாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை அடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.