மனைவி, 3 குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து, விளையாட்டு வீரர் தற்கொலை!

காரிலிருந்து இறங்கும்போது, அவன் (ரோவான்) என் மீது பெட்ரோல் ஊற்றிவிட்டான் என்று கதறியுள்ளார் ஹன்னா...
மனைவி, 3 குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து, விளையாட்டு வீரர் தற்கொலை!
Updated on
2 min read

நியூஸிலாந்து வாரியர்ஸ் ரக்பி அணிக்காக லீக் போட்டிகளில் விளையாடிய வீரர் தனது மனைவி, மூன்று குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரரான 42 வயது ரோவான் பாக்ஸ்டர், சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹன்னாவைக் காதல் திருமணம் செய்து விக்டோரியா மாகாணத்தில் குடியேறினார். உடற்பயிற்சிக்கூடப் பயிற்சியாளரான தனது மனைவியுடன் இணைந்து உடற்பயிற்சிக் கூடம் ஒன்றைத் தொடங்கினார். ரோவான் - ஹன்னா தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகளும் (6 வயது, 4 வயது) ஒரு ஆண் குழந்தையும் (3 வயது) பிறந்தன. இவர்களுடைய உடற்பயிற்சிக் கூடத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெற்றார்கள்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக ரோவான் - ஹன்னா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் பிரிந்தார்கள். பெற்றோருடன் வசித்த ஹன்னாவுடன் 3 குழந்தைகளும் வளர்ந்தார்கள். அவர்கள் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடம் மூடப்பட்டது. 

தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் வெளியே செல்ல புறப்பட்டார் ஹன்னா. செல்லும் வழியில் காரை வழிமறித்த ரோவான், பேசவேண்டும் என்று காரில் ஏறிக்கொண்டார். காரில் செல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு காரை நிறுத்திய ஹன்னா, காரை விட்டு இறங்குமாறு ரோவானிடம் கூறினார். 

இதனை ஏற்க மறுத்த ரோவான், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஹன்னா மற்றும் குழந்தைகள் மீது ஊற்றினார். இதனால் ஹன்னா பதறினார். உடனே ரோவான் தீயைக் கொளுத்தினார். ஹன்னா, குழந்தைகளின் உடல்களில் தீ பற்றி எரிந்தது. பிறகு ரோவான், கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டார். கார் முழுக்க தீ பற்றி எரிந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அனைவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், ரோவானும் 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியானார்கள். 

ஹன்னாவுக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், 31 வயது ஹன்னாவும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். காப்பாற்றியவர்களில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரிலிருந்து இறங்கும்போது, அவன் (ரோவான்) என் மீது பெட்ரோல் ஊற்றிவிட்டான் என்று கதறியுள்ளார் ஹன்னா. இச்சம்பவத்தால் ரோவான் - ஹன்னா குடும்பம் ஒட்டுமொத்தமாக தீக்கு இரையாகியுள்ளது. 

இச்சம்பவம் விளையாட்டு உலகையும் ஆஸ்திரேலிய மக்களையும் உலுக்கியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இச்சம்பவத்துக்குத் தனது வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com