இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த தமிழக அணி, ரயில்வே அணியை இன்னிங்ஸ் வெற்றியுடன் வீழ்த்தி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் எடுத்து அசத்தியது. முகுந்த் 100 ரன்களும் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தார்கள். ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடிய ரயில்வே அணி, மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இதனால் இந்த ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளைப் பெற்றது தமிழக அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


