

நியூஸிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 24 முதல் ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக இந்திய அணி நேற்று ஆக்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அதில் ஷிகர் தவன் இடம்பெறவில்லை. இதையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று, பெங்களூரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்தில், ஃபீல்டிங் செய்தபோது ஷிகர் தவனுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸில் தவன் பேட்டிங் செய்ய வரவில்லை.
இதையடுத்துக் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக எந்த வீரரைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்வார்கள் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குத் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகிய மூவரிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.