இன்னும் பல சாதனைகளை கோலி முறியடிப்பார்: ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

இந்திய கேப்டன் விராட் கோலி மேலும் பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இன்னும் பல சாதனைகளை கோலி முறியடிப்பார்: ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு
Updated on
1 min read

இந்திய கேப்டன் விராட் கோலி மேலும் பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கோலி அற்புதமான பேட்ஸ்மேன். அவருடைய ரன்களே அவருடைய திறமையை வெளிப்படுத்துகின்றன. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வருகிறார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிப்பதை நாம் பார்க்கத் தான் போகிறோம். ஏற்கெனவே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். வரும் வருடங்களில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார். 

அதிக ரன்கள் எடுக்கும் வேட்கை அவரிடம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் மட்டும் அவர் ரன்கள் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். தவிரவும் இந்திய டெஸ்ட் அணியை உலகின் நெ. 1 அணியாக மாற்றியுள்ளார். உடற்தகுதி முதற்கொண்டு அனைத்திலும் ஒரு தரத்தை அவர் பின்பற்றுகிறார். அணியை மிக அருமையாக வழிநடத்துகிறார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com