கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: தொடரை வெல்லுமா மே.இ, தீவுகள் அணி?

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ளது. 

News image
Updated On :15 ஜூலை 2020, 12:14 pm

DIN

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, ஹோல்டரின் அசத்தலான பந்துவீச்சால் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹோல்டர் 6 விக்கெட்டுகளும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு ஆடிய மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடி 313 ரன்கள் எடுத்தது. கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார். சிப்லி அரை சதம் எடுத்தார். கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்டில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டில் வெற்றியடைந்தது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். கேப்ரியல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நாளை தொடங்கவுள்ளது.

விஸ்டன் கோப்பை, மே.இ. தீவுகள் வசம் உள்ளதால் மீதமுள்ள இரு டெஸ்டுகளையும் வென்று தொடரையும் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்டில் விளையாடாத ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளார்கள். இதனால் கூடுதல் பலத்துடன் வெற்றி என்கிற ஒரே குறிக்கோளுடன் இங்கிலாந்து அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி வரும் மே.இ. தீவுகள் அணி, 2-வது டெஸ்டிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 2-வது டெஸ்ட் மிகவும் பரபரப்பாக அமையும் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.