சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இங்கிலாந்தில் விளையாட ஆஸ்திரேலியாவும் தயார்: 26 பேர் கொண்ட அணி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய பிறகு செப்டம்பர் மாதத்தில்...

News image
Updated On :16 ஜூலை 2020, 6:24 am

DIN

செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் வெள்ளைப் பந்து தொடர்களில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதையடுத்து அதற்கான ஆரம்பக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய பிறகு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி.

இத்தொடரில் விளையாடுவதற்கான ஆரம்பக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டேனியல் சாம்ஸ், ரிலி மெரிடித், ஜோஷ் பிலிப் ஆகிய புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கவாஜா, ஸ்டாய்னிஸ், கோல்டர் நைல் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. 

இங்கிலாந்தில் விளையாடவுள்ள ஒருநாள், டி20 தொடர்கள் குறித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து வருகின்றன. விரைவில் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி:

சீன் அபாட், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசானே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், பென் மெக்டர்மாட், ரிலி மெரிடித், மைக்கேல் நசிர், ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், டார்சி ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.