அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆல்ரவுண்டராக மற்றொரு சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த பென் ஸ்டோக்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 10 சதங்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த 5-வது ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்டோக்ஸ்.

News image
Updated On :18 ஜூலை 2020, 6:01 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்தார். இது நடைபெற்றது முதல் டெஸ்டில்.

2-வது டெஸ்டில் ஆல்ரவுண்டராக இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

நேற்று 176 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 10-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஆல்ரவுண்டராக இன்னொரு சாதனைப் பட்டியலில் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 10 சதங்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த 5-வது ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்டோக்ஸ்.

டெஸ்டில் குறைந்தது 10 சதங்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த ஆல்ரவுண்டர்கள்

சோபர்ஸ்: 93 டெஸ்டுகள், 26 சதங்கள், 235 விக்கெட்டுகள்
போத்தம்: 102 டெஸ்டுகள், 14 சதங்கள், 383 விக்கெட்டுகள்
சாஸ்திரி: 80 டெஸ்டுகள், 11 சதங்கள், 151 விக்கெட்டுகள்
காலிஸ்: 166 டெஸ்டுகள், 45 சதங்கள், 292 விக்கெட்டுகள்
ஸ்டோக்ஸ்: 65 டெஸ்டுகள், 10 சதங்கள், 153 விக்கெட்டுகள்
 
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-ம் நாள் முடிவில் மே.இ. தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.