மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீராங்கனை: இணையத்தில் வைரலான விடியோ

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image

மித்தாலி ராஜ்

Updated On :5 மார்ச் 2020, 12:49 pm

புது தில்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மித்தாலி ராஜ். இவர் உலகிலேயே அதிக அளவு ஒரு  நாள் போட்டிகளில் ஆடிய வீராங்கனை  உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்துள்ளவர். கடந்த வருடம் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தயாராக்கி வருகிறார்.

இந்நிலையில் வியாழனன்று வெளியான மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் மித்தாலி இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கொண்டு, கிரிக்கெட் உபகரணங்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு  வாழ்த்து சொல்லலும் விதமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. மகளிர் தினத்தினை முன்னிட்டு இந்த விடியோ  வெளியிடப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.     

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியுடன் மித்தாலி அதனை தனது இன்ஸ்டாக்ராம்  பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  .   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.