ராஜ்கோட்டில் நடைபெற்ற பெங்கால் - செளராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.
டாஸ் வென்ற செளராஷ்டிரம் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் ரன்களைச் சேர்க்க கடினமாக இருந்ததால் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடினார்கள். 31 வயது அர்பித் வசவதா106 ரன்களும் புஜாரா 66 ரன்களும் எடுத்தார்கள். பரோட், வி.எம். ஜடேஜா ஆகிய இருவரும் அரை சதம் எடுத்தார்கள். 171.5 ஓவர்கள் வரைக்கும் விளையாடி 425 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது செளராஷ்டிரம் அணி. பெங்கால் அணியில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் ஷபாஸ் அஹ்மது 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பெங்கால் அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற கடுமையாகப் போராடியது. கடைசியில் 161 ஓவர்கள் வரை விளையாடி 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சேட்டர்ஜி 81 ரன்கள் எடுத்தார். டி.ஏ. ஜடேஜா 3 விக்கெட்டுகளும் உனாட்கட், மன்கட் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
செளராஷ்டிரம் அணி, 2-வது இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் செளராஷ்டிரம் அணி, முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. இதற்கு முன்பு நவாநகர், மேற்கு இந்தியா ஆகிய பெயர்களில் இருந்தபோது இருமுறை ரஞ்சி கோப்பையை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


