ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஓய்வு நேரத்தில் பொன்னியின் செல்வன் நூலை வாசிக்கும் ஆர். அஸ்வின்!

ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடரான குயினைப் பார்த்து வருகிறேன். சிறந்த புத்தகமான ...

News image
Updated On :25 மார்ச் 2020, 5:04 am

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிக்கிறேன் என கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின், க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஓய்வு நேரத்தில் இணையத் தொடர்கள் அல்லது படங்கள் பார்ப்பேன். என் மனைவியை கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடரான குயினைப் பார்த்து வருகிறேன். சிறந்த புத்தகமான பொன்னியின் செல்வனையும் வாசித்து வருகிறேன். அந்த நூல் 5 பாகங்கள் கொண்டது. இந்தச் சமயத்தில் என்னிடம் படிக்க நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். இதனால் ட்விட்டரில் தனது ஐடியின் பெயரை, வீட்டினுள் இரு இந்தியா என்கிற அர்த்தம் வருவது போல மாற்றியுள்ளார் அஸ்வின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.