யுவ்ராஜ் சிங்குக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த தோனி & கோலி: தந்தை யோக்ராஜ் சிங் சாடல்
தோனி, கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் என அனைவரும் யுவ்ராஜ் சிங்குக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


தோனி, கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் என அனைவரும் யுவ்ராஜ் சிங்குக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பேட்டியில் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் கூறியதாவது:
தோனி, கோலி மட்டுமல்லாமல் தேர்வுக்குழுவினரும் யுவ்ராஜுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். சமீபத்தில் ரவி சாஸ்திரியைச் சந்தித்தபோது, தோனி, கோலி, ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரர்கள் ஓய்வு பெறும்போது சரியான முறையில் அவர்களை வழியனுப்ப வேண்டும் எனக் கூறினேன். யுவ்ராஜ் சிங்கின் முதுகில் பலர் குத்தியுள்ளார்கள்.
இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர் ஷரண்தீப் சிங், தேர்வுக்குழுக் கூட்டத்தில், யுவ்ராஜ் சிங்கைத் தேர்வு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டின் அரிச்சுவடி கூட தெரியாதவர்களை எப்படித் தேர்வுக்குழு உறுப்பினர் ஆக்கினார்கள்? பிறகு அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? யுவ்ராஜ் சிங் நன்றாக விளையாடினால் தங்களுக்கு என்ன ஆகுமோ எனப் பலர் வருந்தியுள்ளார்கள்.
2011 உலகக் கோப்பை அணியில் யுவ்ராஜ் சிங்கை விடவும் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவுக்குத்தான் அதிக ஆதரவு அளித்தது. சுரேஷ் ரெய்னா அணியில் உள்ளதால் இனிமேல் யுவ்ராஜ் சிங் அணிக்கு வேண்டாம் என அணியின் கூட்டத்தில் ஒருவர் சொன்னதாகவும் தகவல் வந்தது. இதை நான் சொல்லவில்லை. யுவ்ராஜ் சிங்கும் பல கிரிக்கெட் வீரர்களும் கூறியுள்ளார்கள் என்றார்.
2019, ஜூன் 10 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவ்ராஜ் சிங் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...