இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது: ஹர்பஜன் சிங்

சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

News image
Updated On :7 மே 2020, 4:55 am

DIN

சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சிஎஸ்கேவுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

சிஎஸ்கே உடையை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. என்னது இது? கனவு தானா என எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை அணி சிஎஸ்கேவுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாகவே கருதப்படும். ஆட்டம் சவாலானதாக இருக்கும். திடீரென மும்பை அணி உடையை அணியாமல் சென்னை அணியின் உடையை அணிந்தபோது எனக்குக் கடினமாக இருந்தது. இதற்குப் பழகுவதற்குச் சிறிது நாளானது.

2018-ல் முதலிலேயே மும்பைக்கு எதிராக விளையாடினோம். அதனால் நல்லவேளை இந்த ஆட்டம் சீக்கிரமே நடந்து முடிந்தது எனத் தோன்றியது. முதல் சீஸன் முழுக்க எனக்கு விசித்திரமாகவே இருந்தது. இரண்டாவது சீஸனில் அந்தளவுக்கு இல்லை என்று கூறினார்.

ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2017 வரை 10 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.