ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோலியுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் எச்சரிக்கை

மிகச் சிறந்த வீரர்களிடம் இந்த உத்தி எடுபடாது. அவரை எதுவும் செய்ய வேண்டாம்...

News image
Updated On :6 நவம்பர் 2020, 8:31 am

DIN

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ள விராட் கோலி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் பேட்டியளித்ததாவது:

கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர் கவலைப்பட மாட்டார். மிகச் சிறந்த வீரர்களிடம் இந்த உத்தி எடுபடாது. அவரை எதுவும் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அதுவே கோலிக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கும். அதனால் அவர் அதிக ரன்கள் எடுப்பார்கள். எனவே டெஸ்ட் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றார். 

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.