டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர்?
ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் சில காலமாகும் என்பதால்...


காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வாகவுள்ளார்.
ஐபிஎல் போட்டியின்போது ரோஹித் சர்மாவுக்குத் தொடை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவர் இடம்பெறவில்லை. எனினும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். சக வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள், பயிற்சியாளர்களின் கண்காணிப்பில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார் ரோஹித் சர்மா. இஷாந்த் சர்மா, விக்கெட் கீப்பர் சஹா ஆகியோரும் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற போதும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு உடற்தகுதியை நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ல் தொடங்குகிறது. அடுத்த சில நாள்களில் ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் காயத்திலிருந்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது கடினம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் சில காலமாகும் என்பதால் அவர்களால் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க முடியாது என்கிற தகவலை தேசிய கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், பிசிசிஐயிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். இதனால் இருவரும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகவுள்ளார்.
இதையடுத்து ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. இதுகுறித்த விவரங்களை பிசிசிஐ விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...