சிட்னி ஒருநாள் ஆட்டம்: ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம்
முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.
சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
மார்ச் மாதத்துக்குப் பிறகு இரு அணிகளும் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி வருகிறார்கள். மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கையில் 50% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்குத் திரும்பி வருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஃபிஞ்சும் வார்னரும் முதல் ஐந்து ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி நன்றாகப் பந்துவீசினார். இந்த ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டினார் ஃபிஞ்ச். டேவிட் வார்னருக்கு அடுத்ததாக விரைவாக இந்த இலக்கை எட்டிய 2-வது ஆஸி. வீரர்.
10 ஓவர்களில் 51 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகும் சிரமம் இல்லாமல் விளையாடினார்கள் ஃபிஞ்சும் வார்னரும்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது. ஃபிஞ்ச் 36, வார்னர் 34 ரன்கள் எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...