சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டேவிட் வார்னருக்குக் காயம்: ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து விலகல்!

ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 4:47 am

DIN

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் 2-ம் நாள் ஒருநாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீதமுள்ள ஒருநாள் ஆட்டத்திலும் டி20 தொடரிலும் இருந்து வார்னர் விலகியுள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என்கிற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இதையடுத்து வார்னருக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸி. அணிக்குத் தேர்வாகியுள்ளார். 

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கு ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.