காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஐசிசி தரவரிசை: முன்னேற்றம் அடைந்துள்ள இந்திய மகளிர் அணி

மகளிர் ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கான மகளிர் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2020, 11:34 am

DIN

மகளிர் ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கான மகளிர் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்திய அணி, இதன்மூலம் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. விளையாடிய 21 ஆட்டங்களில் 20-ல் வெற்றி பெற்றதால் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் 39 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. தரவரிசையில் இந்தியா, இங்கிலாந்து 2-ம் மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.