சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நவம்பர் 27 முதல் தொடக்கம்: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்களின் உத்தேச அட்டவணை!

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2020, 10:03 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுக்கும் இடையே வீரர்களின் தனிமைப்படுத்துதல், பயிற்சிகள் தொடர்பாக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதே நேரத்தில் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் அட்டவணை வெளியிடப்படும்.  

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்: உத்தேச அட்டவணை

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: நவம்பர் 27, சிட்னி
2-வது ஒருநாள்: நவம்பர் 29, சிட்னி
3-வது ஒருநாள்: டிசம்பர் 1, கேன்பரா

டி20 தொடர்

முதல் டி20: டிசம்பர் 4, கேன்பரா
2-வது டி20: டிசம்பர் 6, சிட்னி
3-வது டி20: டிசம்பர் 8, சிட்னி

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 17 - 21, அடிலெய்ட் (பகலிரவு) 
2-வது டெஸ்ட்: டிசம்பர் 26 - 30, மெல்போர்ன் 
3-வது டெஸ்ட்: ஜனவரி 7 - 11, சிட்னி
4-வது டெஸ்ட்: ஜனவரி 15 - 19, பிரிஸ்பேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.