சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

21 வயது கேம்ரூன் கிரீன் முதல்முறையாக ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 அக்டோபர் 2020, 5:15 am

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நேராக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் இந்திய வீரர்கள். ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவுள்ள (டி20 தொடா், ஒரு நாள் தொடா், டெஸ்ட் தொடா்) இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது கேம்ரூன் கிரீன் முதல்முறையாக ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் மோசஸ் ஹென்றிகஸ் 3 வருடங்களுக்குப் பிறகு ஆஸி. அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், மோசஸ் ஹென்றிகஸ், மார்னஸ் லபுசானே, கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.