பரிசாகக் கிடைத்த மஹிந்திரா காரைத் தனது பயிற்சியாளருக்கு வழங்கிய நடராஜன்
மஹிந்திரா நிறுவனம் தனக்கு அளித்த காரை தனது பயிற்சியாளருக்கு வழங்கியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.


மஹிந்திரா நிறுவனம் தனக்கு அளித்த காரை தனது பயிற்சியாளருக்கு வழங்கியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் நடராஜன் விளையாடினார்.
ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய புதிய வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், சிராஜ், சைனி, ஷுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் அவர்களுக்குப் பரிசாக அளிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா கூறினார்.
இதையடுத்து மஹிந்திரா கார் அனைவருக்கும் சில நாள்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்துதனது அறிமுக டெஸ்டில் உடுத்திய சீருடையை ஆனந்த் மஹிந்திராவுக்கு வழங்குவதாக நடராஜன் அறிவித்துள்ளார்.
மேலும் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு வழங்கியுள்ளார் நடராஜன். இத்தகவலை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் ஜெயபிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...