அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது. 

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 4:44 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது. 
14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. 
இன்றைய ஆட்டத்தில் பிராவோ பந்துவீச்சின்போது தமிழக வீரர் முருகன் அஸ்வின் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிராவோ மைதானத்தில் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
விஜய் நடிப்பில் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் நடனமாடிய விடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.