அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தீபக் சஹார் மிரட்டல் பந்துவீச்சு: சென்னைக்கு 107 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் சேர்த்தது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 3:46 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் சேர்த்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் எந்த மாற்றமுமின்றி கடைசி ஆட்டத்தில் விளையாடிய அணியுடன் களமிறங்கின.

பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் ஏமாற்றினர். மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமலும், ராகுல் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பஞ்சாப் அணிக்கு கைகொடுக்கவில்லை.

கெயில் 10, ஹூடா 10, பூரன் 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாருக்கான் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயர உதவினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

சென்னை அணியில் அபாரமாக பந்துவீசிய தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.